கடிதத்தை விநியோகிக்கவில்லை...
28-06-2016 10:07 AM
Comments - 0       Views - 325

தபால், உப-தபால், முகவர், கிராமிய முகவர் மற்றும் தோட்டப்புற தபால் அலுவலகங்கள் என நாட்டில் மொத்தமாக 4,692 தபால் அலுவலகங்கள் இருப்பதாகவும் அதில், 1,887 உப தபால் அலுவலகங்கள், 2015ஆம் ஆண்டு ஒரு கடிதத்தையேனும் விநியோகிக்கவில்லை என்றும் இலங்கை தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் மொத்தமாக 3,410 உப-தபால் அலுவலகங்கள் இருக்கின்றன. அதில், 41 உப-தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. 3,369 உப- தபால் அலுவலகங்கள் மாத்திரமே கடமைகளை மேற்கொள்கின்றன.

இதேவேளை, வருடாந்தம் நபரொருவருக்கு 16 கடிதங்கள் கிடைப்பதாகவும் ஒரு தபால் அலுவலகம் 4,332 மக்களுக்கு சேவையாற்றுகின்றது என்றும் ஒவ்வொரு தபால் அலுவலகத்தின் மூலமும் சேவையாற்றப்படுகின்ற நிலப்பகுதி 13 சதுர கிலோமீற்றர் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

"கடிதத்தை விநியோகிக்கவில்லை..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty