2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யானைகளை கொடுக்காவிடின் பிடுங்குவோம்

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரஹராக்களுக்கு யானைகளை கொடுக்காவிடின், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாக, உரிமையாளர்களிடமிருந்து யானைகளை மீட்டெடுப்போம் என்று வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.

பல்லேகெலேயில் அமைந்துள்ள மத்திய மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரஹராக்களுக்கான யானைகளை, வழங்குமாறு உரிமையாளர்களிடம் அரசாங்கத்தினால் வேண்டுகோள் விடுக்கப்படும். அவ்வேண்டுகோளுக்கு செவிசாய்க்காது இருந்தால், அவர்களிமிருக்கும் யானைகள், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பெற்றுக்கொடுக்கப்படும்.

பெரஹராவுக்கென யானைகள் இணைக்கப்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதனால், அதற்கென ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாத யானைகளின் அனுமதிப்பத்திரங்களை வலுவற்றதாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட யானைகள் பெரஹராவில் பயன்படுத்த முடியாது எனவும் ஆனால், இதனால் காட்டு யானைகள் துன்புறுத்தப்படுவதில் இருந்து தடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரஹராவுக்கென இணைக்கப்படவுள்ள யானைகள் தற்போதைக்குப் பெறப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில், 120 இலிருந்து 140 வரை காணப்படுவதாகத் தெரிவித்தார்.

பெரஹராவுக்கெனப் பயிற்றப்படும் மத்திய நிலையங்களில் 30 யானைகள் உள்ளன என்றும் அவர் தெரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .