2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பற்றைகளை அகற்றுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2016 ஜூன் 29 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், மக்கள் மீளக்குடியமராத காணிகளில் வளர்ந்துள்ள பற்றைகளினால், மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்கள் இடர்களை எதிர்கொண்டு வருவதாக, பிரதேச செயலாளர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும், பலர் தங்களுடைய காணிகளை துப்பரவு செய்யாத நிலைமை காணப்படுகின்றது. வீட்டுத்திட்டத்தின் மூலம் நிரந்தர வீடுகளை காணிகளில் அமைத்துள்ள சில குடும்பங்கள், தங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கென, நகரங்களில் தங்கியிருப்பதாலேயே அக்காணிகள், பற்றைகளாகக் காணப்படுகின்றன.

இதனால், நிரந்தர குடியிருப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தப் பற்றைக் காணிகளை மிருகங்கள் மற்றும் பாம்புகள், தங்களது உறைவிடமாக மாற்றி வருவதன் காரணமாக, மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்ககளைச் சேர்ந்தவர்கள், இரவு வேளைகளில் நடமாடுவதில், பல்வேறு இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், மீள்குடியேற்றத்தின் பின்னர் நிரந்தர வீடுகளை அமைத்துவிட்டு வீடுகளில் வசிக்காத குடும்பங்களின் விபரங்களை பிரதேச செயலகங்கள் ஊடாக மாவட்டச் செயலகம் திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X