2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்: இராணி எலிஸபெத்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 28 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஐக்கிய இராச்சியம் முடிவெடுத்துள்ள நிலையில், அந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் முதன்முறையாக நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இங்கிலாந்து இராணி எலிஸபெத், "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். அவருடைய உடல்நலம் தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டபோதே, அவரது இந்தப் பதில் வழங்கப்பட்டுள்ளது.

வட அயர்லாந்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர், அங்கு வைத்து தலைவர்கள் பலரையும் சந்தித்தார். இதில், புரட்சிகரக் குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பிரதி முதல் அமைச்சருமான மார்ட்டின் மக்கின்னெஸ்ஸையும் அவர் சந்தித்தார். 'ஹலோ, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?" என மார்ட்டின் வினவினர். "நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். ஹா" என இராணி பதிலளித்தார்.

அதன் பின்னர், "அதிக வேலைப்பளுவுடன் இருந்தோம். ஏராளமானவை நடந்துகொண்டிருந்தன" என அவர் தெரிவித்தமை, சர்வஜன வாக்கெடுப்புத் தொடர்பான அவரது கருத்தா அல்லது அவர் கொண்டாடும் இரண்டு பிறந்தநாள்கள் தொடர்பான கருத்தா என்பது தொடர்பாகவும், சந்தேகங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X