2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அவுஸ்திரேலிய பிரதான கட்சிகளின் கொள்கை வித்தியாசங்கள்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 01 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய மக்கள் நாளை வாக்களிக்கவுள்ள நிலையில், லிபரல் கட்சியைச் சேர்ந்த பழைமைவாதக் கொள்கைகளையுடைய பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லுக்கோ அல்லது லிபரல் கொள்கைகளையுடைய பில் ஷோர்ட்டினுக்கோ பிரதானமாக வாக்களிக்கவுள்ளனர்.

பிரதான இரு கட்சிகளுக்குமிடையிலான பிரதான கொள்கை வித்தியாசங்கள் கீழ்வருமாறு:

பொருளாதாரம்: * பணிகள், வளர்ச்சி ஆகியவற்றில் லிபரல் கட்சி கவனம் செலுத்தகிறது. செலவை விட வரவு அதிகமான வரவு - செலவுத் திட்டத்தை 2020-21க்கு முன்னர் வழங்க வாக்குறுதி.

* அதே காலப்பகுதியில் வரவு - செலவுத் திட்டத்தைச் சரியாக்க தொழிலாளர் கட்சியும் வாக்குறுதி. ஆனால், அதற்கு முன்னர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான செலவால், அக்காலப்பகுதியில் செலவு அதிகமாக இருக்கும்.

குடிவரவு: * கடுமையான குடிவரவுக் கொள்கைகள். படகுகளைத் திருப்பியனுப்புதல், பசுபிக் தீவுகளில் அகதிகளைத் தங்க வைத்தல் போன்றன, இரு தரப்பினதும் பொதுவான கொள்கைகளாகும். ஆனால், தொழிலாளர் கட்சிக்குள் சிறியளவு எதிர்ப்புக் காணப்படுகிறது.

காலநிலை மாற்றம்:* 2030க்கும் காபனீரொட்சைட் வெளியேற்றத்தை 36 சதவீதத்தால் குறைத்தல் என்ற டொனி அபொட்டின் வாக்குறுதியை, டேர்ண்புல்லும் வலியுறுத்துகிறார்.

* அதே காலப்பகுதியில், வெளியேற்றத்தை 45 சதவீதத்தால் குறைக்க, தொழிலாளர் கட்சி உறுதி.

சமபாலுறவாளர்கள்: * சமபாலுறவர்களின் உறவுக்காக நீண்டகாலம் போராடும் டேர்ண்புல், இவ்வாண்டு முடிவில் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அறிவிப்பு.

* அவ்வாறான வாக்கெடுப்பு, நாட்டைப் பிளவுபடுத்தும் எனத் தெரிவிக்கும் ஷோர்ட்டின், ஆட்சியமைத்து 100 நாட்களுக்கும் சமபாலுறவர்களின் திருமணத்துக்கு அங்கிகாரம் வழங்கவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .