2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யூரோ 2016: அரையிறுதிக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 30 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் இடம்பெற்று வருகின்ற யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்கு, முதலாவது அணியாக போர்த்துக்கல் தகுதி பெற்றுள்ளது. முதலாவது காலிறுதிப் போட்டியில் போலந்தை தோற்கடித்தே அரையிறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றுள்ளது. 

போட்டியின் வழமையான நேரத்தில் நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலையே பெற்றிருந்த நிலையில், மேலதிக நேரத்துக்கு போட்டி சென்றிருந்தது. அதிலும் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், வழங்கப்பட்ட பெனால்டியில், 5-3 என்ற ரீதியில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குள் போர்த்துக்கல் நுழைந்தது.

இப்போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே, போலந்து அணியின் தலைவர், ரொபேர்ட் லெவன்டோஸ்கி கோலோன்றைப் பெற்று தனது அணியை முன்னிலைப்படுத்தியபோதும், போட்டியின் 33ஆவது நிமிடத்தில், போர்த்துக்கல் அணியின் 18 வயதான இளம்வீரர் ரெனாட்டோ சந்தேஸ் அபாரமாக கோலோன்றினைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியிருந்தார்.

பெனால்டியில், போர்த்துகல் அணியின் தலைவரான கிறிஸ்டியனோ ரொனால்டோ அதிரடியாக ஆரம்பித்ததிலிருந்து, இரண்டு அணிகளின் வீரர்களும் மாறி மாறி கோலைப் பெற்றபோதும் போலந்து சார்பில் நான்காவது பெனால்டியை போர்த்துக்கல் அணியின் கோல்காப்பாளர் பற்றிசியோ அபாரமாக தடுக்க, போர்த்துக்கல்லின் ஐந்தாவது பெனால்டியை குவாரஸ்மா அமைதியாக கோல்கம்பதுக்குள் புகுத்த போர்த்துக்கல் த்ரில் வெற்றி பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X