2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சங்கமித்த சரத்துக்கு களனியே சன்மானம்

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான ‡பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,  ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டதுடன், அக்கட்சியின் களனித் தொகுதியின் பிரதான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான கட்சி உறுப்புரிமை, கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் வைத்து, நேற்று வியாழக்கிழமை (30) வழங்கப்பட்டது.

காணியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன காலமானதையடுத்து, அவரது நாடாளுமன்ற பதவி வெற்றிடத்துக்கே பொன்சேகா, தேசியப்பட்டியலின் ஊடாக கடந்த பெப்ரவரி மாதம் நியமிக்கப் -பட்டிருந்தார். அப்போது, பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர், ஐ.தே.கவின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, போதிய வாக்குகளைப் பெற்றுக்கொள்ளததால், நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .