2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு ரூ. 8.5 பில். வெளிநாட்டுக்கடன்

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

உயர்வட்டி வீதங்களுடன் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களால் நாட்டின் நிதி நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்த பதில் நிதியமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன, கடந்த மாத  இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக்கடன், 8.503 பில்லியன் ரூபாயாக இருந்தது என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று, வியாழக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அரசாங்கமானது, சாத்தியமான அளவுக்கு வரியை அதிகரித்துள்ளது. இனிமேல் வரி அதிகரிப்பதற்கான சாத்தியம் இல்லை.
பிராந்தியத்தில் இலங்கையிலேயே மிகவும் குறைவான வரி வருமானம் காணப்படுகின்ற நிலையில், அதை அதிகரிப்பதற்கான ஏனைய வழிமுறைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. மொத்தத் தேசிய உற்பத்தியில் 1995ஆம் ஆண்டு 20.4 சதவீதமாக இருந்த அரச வருமானம் 2014ஆம் ஆண்டில் 11.4 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தால் முகங்கொடுக்கப்படும், தற்போதைய நிதி நெருக்கடிக்கு அரச வருமானம் குறைவடைந்தமையே பிரதான காரணமாகும். அந்த மோசமான நிலமைக்கு முன்னைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

உயர்வட்டி வீதங்களுடன் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களால் இந்த நிலைமை மேலும்  மோசமடைந்துள்ளதோடு, கடந்த மாத இறுதியில் மொத்த வெளிநாட்டுக்கடன் 8.503 பில்லியன் ரூபாயாக இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அபே குணவர்தன, இந்த வெளியேற்றம் நேர்மறையான ரீதியாகவும் எதிர்மறையான ரீதியாகவும் இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்' எனத் தெரிவித்தார்.

'இலங்கையில் வருடாந்த மொத்த உற்பத்தியில் 40 சதவீதமானவை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செல்கின்றன. அதில், 25 சதவீதமானவை ஐக்கிய இராச்சியத்துக்குச் செல்கின்றன. ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து,

ஏற்றுமதித் துறைக்கு இடர்களும் குழப்பங்களும் ஏற்படும். ஆகவே அதன்காரணமாக, இந்த நிலைமையயைத் தீர்ப்பதற்கு, ஐக்கிய இராச்சியத்துடன், வேறானதும் தனியானதுமான ஏற்றுமதி இறக்குமதி ஒப்பந்தமொன்று தேவைப்படுகிறது' என அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X