2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மீள்குடியேறவுள்ள மக்களுக்கு வெடிபொருள் விழிப்புணர்வு

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 25ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடும் மற்றும் காணிகளை துப்பரவு செய்யும் மக்களுக்கு வெடிபொருட்கள் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது.

சொன்ட் மற்றும் யூனிசெப் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு, இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகின்றது.

காணிகளை துப்பரவு செய்யும்போது சந்தேகத்துக்;கிடமான பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும், அதனை தொடவே, உரசவோ கூடாது, மற்றும் குப்பைகளுக்கு தீ மூட்டும்போது பொதுவாக மாலை நேரங்களைப் பயன்படுத்துவதுடன், இது தொடர்பில் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி தீ மூட்டுமாறு அறிவுறுத்தப்பட்டன.

மேலும், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் தொடர்பில் அருகிலுள்ள இராணுவ காவலரண், அல்லது பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்கு தகவல் வழங்குவதன் மூலம் அவர்கள் அதனை பாதுகாப்பாக அகற்றுவார்கள் என இதன்போது மக்களுக்கு கூறப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .