2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கம்மன்பிலவுக்குப் பிணை

Thipaan   / 2016 ஜூலை 01 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை, ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரரப் பிணைகளிலும் 25,000 ரூபாய்  ரொக்கப்பிணையிலும் செல்ல கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, அனுமதித்துள்ளார்.

போலி அற்றோனி தத்துவத்தை பயன்படுத்தி 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை, பிரித்து விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஜுன் மாதம் 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அவர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய பிரஜையான பியன்ஜோன் ஷெடிக் என்பவரினால் முதலீடுசெய்யப்பட்டு, டிஜிட்டல் நொமினிஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட 41 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை பிரித்துப் பிரித்து விற்றமை மற்றும் நம்பிகையை இல்லாதுசெய்தல், அவ்வாறு செய்வதற்கு சூழ்ச்சி செய்தல், அந்த தவறை செய்வதற்கு உடந்தையாக இருந்தல், ஆவணங்களை தயாரிப்பதற்கு ஒத்துழைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .