2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காத்தான்குடியில் பூங்கா

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் பெண்களுக்கான  பூங்கா அமைப்பதற்கென 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் நிதியினை நகர திட்டமிடல் மற்றும்  நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒதுக்கீடு செய்துள்ளார் என குறித்த அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

நடைப்பயிற்சிக்கான பாதையுடன் அமையவுள்ள இப்பூங்கா சுற்றுச்சூழல் நட்புறவு தன்மையைக்; கொண்டு அமையவுள்ளது.
ஆற்றங்கரையோடு சேர்ந்த நீரியல் அம்சங்களையும் உள்ளடங்கிய வகையில் அமையவுள்ள இப்பூங்கா தொடர்பில் இணைப்புச் செயலாளர் முபீன், காத்தான்குடி பிரதேச செயலாளருடனும் காத்தான்குடி நகரசபை ஆணையாளருடனும்; சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இத்திட்டம் தொடர்பில் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக முபீன் தெரிவித்தார்.

இத்திட்டத்துக்கான திட்டமிடலை மேற்கொள்வதன் பொருட்டு காத்தான்குடி நகர சபையின் திட்டமிடல் பிரிவு நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் வழிகாட்டலில் கொழும்பில் அமையப் பெற்றுள்ள பூங்காங்களை பார்வையிட விரைவில் கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் முபீன் மேலும் தெரிவித்தார்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .