அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம்
13-07-2016 03:25 PM
Comments - 0       Views - 248

-எஸ்.கர்ணன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அ.அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (13) நடைபெற்றது.

கட்சியின் பருத்தித்துறை தொகுதியின் செயலாளர் எஸ்.தீபானன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.குருசாமி அமிர்தலிங்கத்தின் படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதில் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

"அமிர்தலிங்கத்தின் 27ஆவது நினைவுதினம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty