2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாழ்வை ஊக்குவிப்பதற்காக வைத்தியர்களுடன் AIA கைகோர்ப்பு

Gavitha   / 2016 ஜூலை 20 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கவும், ஆரோக்கிய வாழ்வின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முன்னுரிமையொன்றை வழங்கும் நடவடிக்கைகளை AIA ஸ்ரீ லங்கா முன்னெடுத்துள்ளது. இதன் பிரகாரம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) இருதரப்புக்கும் நன்மையளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் கைச்சாத்திட்டது.  

இக்கூட்டாண்மையானது AIA நிறுவனத்தின் 'ஆரோக்கிய வாழ்வின்' இலக்குக்கு சிறந்ததொரு பெறுமதியை வழங்குவதுடன், வைத்தியர்கள் மத்தியில் தமது குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிஓய்வுத் திட்டமிடலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் அதிகரிக்கின்றது. மேலும் AIA இனது பணி ஓய்வுத் திட்டம் ஒன்றில் முதலீடு செய்யும் அரச வைத்திய அதிகாரிகள் சங்க (GMOA) உறுப்பினர்களுக்கு பிரத்தியேக நன்மைகளுடனான இலவச விபத்து மரணக் காப்பீடு ஒன்றும் வழங்கப்படுகின்றது.

'இக்கூட்டாண்மையானது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு (GMOA) மிகவும் முக்கியமானதொரு மைல்கல்லாகும். மேலும் அதன் அங்கத்தவர்கள் தமது குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது எதிர்காலம் குறித்துத் திட்டமிடவும் இது உதவும். அத்துடன் AIA யினது ஆரோக்கிய வாழ்வின் இலக்கை மேலும் அர்த்தமுள்ளதாக்க எங்களால் பங்களிப்புச் செய்யவும் முடியும்' என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் (GMOA)  தலைவர் வைத்தியர். அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் (GMOA) பேச்சாளர் வைத்தியர். நவீன் டி சொய்சா 'ஆரோக்கிய வாழ்க்கை குறித்துப் பொது மக்களுக்கு கல்வியூட்டும் AIA யின் முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது. எது ஆரோக்கியமானது, எது ஆரோக்கியமற்றது என்பது பற்றிய போதிய விழிப்புணர்வு இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. எனினும் இதன் பங்காளர்களாக எம்மால் இத்தேசத்துக்கு பாரிய பங்களிப்பொன்றையும் வழங்க முடியும்' எனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X