2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வற் 11% அல்லது 15%

Gavitha   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

வற் 11 சதவீதமாக அறவிடப்படுகிறதா அல்லது 15 சதவீதமாக அறவிடப்படுகிறதா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் தற்போதும் குழப்ப நிலை காணப்படுகிறது. மே மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வற் 15 சதவீதமாக அதிகரிப்பட்டிருந்தது. இதற்கமைய வெவ்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்திருந்தன.

குறிப்பாக சுகாதாரத்துறை, தொலைத்தொடர்பாடல் துறை போன்றவற்றில் இந்த வற் அதிகரிப்பு பாவனையாளர்களுக்கு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச இந்த வற் அதிகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இதன் பிரகாரம் இந்த வற் 15 சதவீதமாக அதிகரித்ததை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் ஜுலை 11ஆம் திகதி அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி வீதத்தை 11 சதவீதமாக குறைத்துள்ளதாக அறிவித்திருந்தன. ஆனாலும் தற்போதும் சில நிறுவனங்கள் 15 சதவீதமாக வற் அறவிடுவதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த நிலை தொடர்பில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் வற் பிரிவுடன் தொடர்பு கொண்ட போது, ஜுலை 12ஆம் திகதி முதல் வற் வரி 11 சதவீதமாக அமைந்துள்ளதாகவும், அதன் பிரகாரம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வற் அறவீடு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இந்நிலையை மீறி செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .