சேவல் சண்டை
20-07-2016 11:22 AM
Comments - 0       Views - 172

தோட்டப்புற காங்கிரஸ் கட்சியின் தலைவர், சேவலையும் எடுத்துக்கொண்டு அரசாங்கத்தின் கிளையொன்றில் தொற்றிக்கொள்வதற்கு எதிராக பெரிய சண்டையொன்றே நடந்துகொண்டிருக்கிறது. அவருக்கு எதிராக தோட்டப்புற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியில் உட்கார்ந்துள்ளனர்.

காங்கிரஸ்காரர்கள், அரசாங்கத்துடன் இணைவதற்கு இவர்கள், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவர்களில், அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர், அண்மையில் இந்h நாட்டின் தலைவரை சந்தித்து, இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம்.

'தேர்தல் காலங்களில், உங்களுக்காக நாங்கள் மட்டுமே இருந்தோம். அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்களை, இன்று ஏன் நீங்கள் எடுக்கிறீர்கள்?' என்று தலைவரிடம் கேட்டாராம். அழும் குரலில் அவர் அவ்வாறு கேட்ட போதிலும், இந்த விடயம் தொடர்பில், தலைவர் பெரியாக பொருட்படுத்தவில்லையாம். இதனை அவதானித்த அந்த அமைச்சர், 'அவர்கள் வந்தால், நாங்கள் போய்விடுவோம்' என்று கூறினாராம்.

அதையும், நாட்டின் தலைவர் பொருட்படுத்தவில்லையாம். மிகவும் ஆறுதலாக, 'சரி, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என்று தலைவர் கூறினாராம். இதைப்பற்றி கேள்வியுற்ற, அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் புத்திசாலியொருவர், கோட்டையிலுள்ள பெரிய நிறுவனத்தில், இப்பிரச்சினை தொடர்பான புதுமையான விதத்தில் பதில் சொன்னாராம். 'இப்போ போகப்போறதாகச் சொல்கிற ஆறு பேரும், எங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அறுவரும் யானைக் கட்சிக்காரர்கள். அந்த பொயின்டை மறிந்துவிட வேண்டாம்' என்று சொன்னாராம்.

"சேவல் சண்டை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty