2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வருமானத்தை அதிகரித்துள்ள மைக்ரோசொஃப்ட்டின் கிளவுட் பிரிவு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 21 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கிளவுட் கணினி பிரிவில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மைக்ரோசொஃப்ட், இதன் காரணமாக தனது காலாண்டு வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில், 3.1 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளதாக மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசொஃப்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் மேற்குறித்த காலப்பகுதியில் 3.2 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இழந்திருந்த மைக்ரோசொஃப்ட்டுக்கு, இம்முறை பெறப்பட்ட வருமானமானது எவ்வளவோ மேலாக அமைந்துள்ளது. கடந்தாண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியில், நொக்கியாவிலிருந்து மைக்ரோசொஃப்ட் வாங்கிய அலைபேசி சொத்துக்களின் பெறுமதியைக் குறைத்துக் காட்டியதற்காக பாரிய தண்டங்களை மைக்ரோசொஃப்ட் செலுத்தியிருந்தது.

மேற்படி காலாண்டு வருமான தகவல்கள் வெளியான பின் அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைக்ரோசொஃப்ட் பங்குகளின் விலையானது நான்கு சதவீதத்தால் உயர்ந்திருந்தது.

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்திலிருந்து, பரந்தளவிலான வருமான வளர்ச்சியை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்காதபோதும், கிளவுட் கணினி பிரிவான Azureஇலிருந்து இலாபங்களை பெற எதிர்பார்க்கின்றனர்.

குறித்த கிளவுட் கணினி பிரிவின் வருமானமானது, ஏழு சதவீதமாக 6.7 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ள நிலையில் மொத்தமாக, 420 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரிலிருந்து 22.6 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலராக வருமானம் உயர்ந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .