2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தர்மம், நீதி சரிவதில்லை; சிலிர்த்து எழும்

Princiya Dixci   / 2016 ஜூலை 21 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலம் போகின்ற போக்கைப் பார்த்தால் திருடர்களும் கொலைகாரர்களும் கூட அமைப்புகளை அமைத்து கோரிக்கைகளை முன்வைத்தாலும் வைப்பார்கள் எனச் சிலர் கேலி பேசலாம்.

திருடர்கள் கூட தங்கள் பக்கத்தில் நியாயம் உண்டு எனவும் சொல்லலாம். 'எனக்கு ஏதாவது வேலையை யாராவது தந்தார்களா?' என்று கேட்பதும் உண்டு.

தனக்கு வேண்டாதவர்கள் துரோகிகள்; எனவே அவர்களைத் தண்டித்தேன் என்றும் குற்றாவாளிகள் வீரமாகப் பேசுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

தமக்குத் தாமே நீதிபதி வேடம் புனைவதும் தீர்ப்பைத் தங்கள் செய்கைக்கே சாதகமாக எழுதுவதும் துஷ்டர்களின் நித்திய கருமம் ஆகும்.

சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்து விட்டன என்பது உண்மைதான். தட்டிக் கேட்காமலும் தடுக்காமலும் சமூகம் கோழைத்தனமாக இருந்தமையும் இதற்கு ஒரு காரணமாகும். தர்மம், நீதி சரிவதில்லை; சிலிர்த்து எழும்.

வாழ்வியல் தரிசனம் 21/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X