2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒலுவில் துறைமுக கடலரிப்பை தடுக்க வேண்டும்

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

கிழக்கு  மாகாண சபையின் 61வது அமர்வு திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள கிழக்கு மாகாண சபையில் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் வியாழக்கிழமை(21) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் ஒலுவில் துறைமுக கடலரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விசேட பிரேரணையொன்றை இன்று சபையில் கிழக்கு மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.தவம் முன்வைத்தார்.

இப்பிரேரனைக்கு ஆதரவாக உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் உரையாற்றும்போது எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவரின் உறுப்புரிமை தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பினார்.

கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரினால் கிழக்கு மாகாண சபை பேரவை செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப்  சம்சுதீனின் ஆகிய என்னுடைய உறுப்புரிமையை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு இருந்தபோதிலும் சட்டத்தின் பிரகாரம் ஒரு மாதகால அவகாசம் வழங்க வேண்டும். அதேவேளை, ஏலவே பேரவைச் செயலாளர் எழுத்து மூலமாக தன்னை சபை அமர்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தின்  பிரகாரம் நீதிமன்றம் செல்வதற்கு சிறப்புரிமை இருப்பதாகவும், இது கூட எதிர்கட்சி தலைவருக்கு விளங்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்  தேசிய காங்கிரஸ் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்றிருந்த இவர் நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வேளையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .