2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி மைத்திரிக்கும் பாடம்கற்பிக்க வேண்டி வரும்

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

பொதுபலசேனா அமைப்பினால் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள், முஸ்லிம்களை  ஏயைய சமுகத்தவரோடு இன ரீதியாக கலவரத்தைத் தூண்டுகின்ற வகையிலேயே உள்ளன. இது முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும் என  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

தவிசாளர் கலப்பத்தி தலைமையில் நடைபெற்ற மாதாந்த சபை அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பொதுபல சேனாவின் செயற்பாடுகள், இலங்கை நாட்டில் எமது முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், உடை, ஹலால், இஸ்லாமிய கலாசாரங்கள் போன்றவற்றோடு விளையாடுவதைப் போன்று உள்ளது.

இந்த நாட்டின் சதந்திரத்திற்கும் இறைமைக்கும்பாரிய பங்களிப்பு வழங்கியவர்கள் ;முஸ்லிம்கள். எந்த  ஒரு சந்தர்ப்பத்திலும் நாட்டைக் காட்டிக் கொடுத்ததோ துண்டாடவோ முயற்சி செய்தது கிடையாது.

ஆரம்பித்தில் பொதுபலசேன கட்சியை ஆதரித்தவர்கள், இன்றுஇவ்வமைப்பை இனவாதிகளாகப் பார்த்துள்ளார்கள்.

நல்லாட்சியிலே ஜனாதிபதி உறங்கிக்கொண்டிருக்கிறாரா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்கள் பாடம்கற்பித்ததைப் போல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாடம்கற்பிக்க வேண்டி வரும்.

எனவே, முஸ்லிம்களுடைய உரிமைப் பிரச்சினையிலே அரசாங்கம் கவனத்தில் கொண்டு இதனை தடுத்து நிறுத்த  வேண்டும் என்றார்.

மேலும், தோப்பூர் பிரதேசத்தில் கள்ளம்பத்தை கிராமம் 10 வீட்டுத்திட்டம் மற்றும் செல்வநகர் நீனாகேணி பகுதி கிண்ணியா பிரதேசத்தில் கண்டலடிஊற்று பூவரசன் தீவு, சூரன்கள், குரங்குபாஞ்சான், மஜீத் நகர், உப்பாறுஃகண்டல் காடு வெள்ளை மணல் சின்னப்பிள்ளைச் சேனை மாபிள் கடற்கரை அண்டிய குடியிருப்பு பொதுமக்களின் காணிகளில் படையினர் இன்னும் நிலை கொண்டமை

நிலாவெளி இக்பால் நகர் குச்சவெளி குச்சவெளி தட்டக்கல் பகுதியிலுள்ள கடற்படையினர் கைவசமுள்ள ஒரு ஏக்கர் காணி இலந்தைகுளம் 5 ம் கட்டை பகுதி துவரங்குளம், பெரியகுளம் அணைக்கட்டுப்பகுதி, புளியலடி கண்டல் இலந்தைக்குளம், சமணங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள வயல் காணிகள், புடவைக்கட்டு சுனாமி வீட்டுத்திட்ட மையவாடி, பிரதான வீதியில் அமைந்துள்ள கடற்படை தளம், ஆக்கிரமிப்பு புல்மோட்டை பிரதேசத்தில் கரையாவெளி பட்டிக்குடா மண்கிண்டிமலை அறிசிமலை தேதவடிதீவு புல்மோட்டை 13,14 ம் கட்டைபகுதிகள் போன்ற குடியிருப்புக் காணிகளில் இன்னும் படையினர் யுத்தம் முடிவடைந்தும் பொது மக்களிடம் ஒப்படைக்காமை

அவ்வாறு விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலைமை வன பரிபாலன திணைக்களத்தினர் இதுவரையும் தடுத்து வைத்திருத்தமை குறித்தும் அவர் பேசினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .