2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

73 இந்திய மீனவர்களுக்கு விடுதலை

Gavitha   / 2016 ஜூலை 23 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 73 பேரை விடுதலை செய்யவுள்ளதாக, மீன்பிடித்துறை அமைச்சு இன்று சனிக்கிழமை (23) அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீடுகள் காரணமாக, குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 6ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்புக்குட்பட்ட பகுதிகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது என்று, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று வெள்ளிக்கிழமை (22) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .