2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக நிலைமை சுமூகம்: மொஹான் டி சில்வா

Princiya Dixci   / 2016 ஜூலை 23 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். பல்கலைக்கழக நிலைமை சுமூகமான சூழலுக்கு திரும்பியுள்ளது. எந்தவித அசம்பாவித நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இல்லை. எனவே, வெளிமாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தைரியமாக எந்தவித பயமும் இன்றி தமது கல்வி நடவடிக்கையினை தொடரமுடியும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக்த்துக்கு விஜயம் செய்த பல்கலைக்கழக மானிய ஆனைக்குழு, நேற்று வெள்ளிக்கிழமை (22) துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

கடந்த 16ஆம் திகதி, விஞ்ஞான பீட மாணவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி அனைத்துப் பீடங்களின் கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கை மூலம் பத்து பீடங்களில் மருத்துவம், சித்தமருத்துவம், விவசாயம், வவுனியா வளாகம்; உள்ளடங்களாக ஏழு பீடங்களின் கல்வி செயற்பாடுகள் முழுமையாக ஆரம்பமாகித் தொடர்ந்து இடம்பெறுகிறது.

இந்நிலையில், மீதமுள்ள பீடங்களும் விரைவில் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கு பல்பலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்பலைக்கழக மானிய ஆணைக்குழு ஆணையாளர், உறுப்பினர்கள் அடங்கிய குழு நேரில் சென்று மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தற்போது பல்கலைகழக நிலைமை சுமூகமாகவே காணப்படுகிறது. மாணவர்கள் பாதுகாப்பிற்கு எந்தவிதக் களங்கமும் இல்லை.

எனவே, நாட்டில் அனைத்துப் பகுதியில் இருந்தும் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அச்சமின்றி தமது கல்வி நடவடிக்கையினை தொடரமுடியும். அதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .