2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'கடவைக் காப்பாளர்களும் திணைக்களத்தில் உள்வாங்கப்படவேண்டும்'

Princiya Dixci   / 2016 ஜூலை 23 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

புகையிரதக் கடவைக் காப்பாளர்கள், புகையிரத திணைக்களத்தினுள் உள்வாங்கப்படவேண்டும் என வட மாகாண புகையிரதக் கடவைக் காப்பாளர் சங்கத்தின் தலைவர் ரோகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என பல்வேறான போராட்டங்களை நடத்தியுள்ளோம். அத்துடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு இது தொடர்பாக அனுப்பிய கடிதங்களுக்குப் பல பதில் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

மேலும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு அவரின் செயலாளர் 3 வாரங்களுக்கள் உரிய தீர்வு வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

எமக்கு எழுத்து மூலமாக அதாரங்கள் கிடைத்துள்ளதே தவிர எந்த வித விமோசனங்களும் கிடைக்கவில்லை. தற்போது நாடு முழுவதுமாக 3,600 புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் கடமையாற்றுகின்றோம். அதில் வட மாகாணத்தில் 450 ஊழியர்கள் கடமையாற்றுகின்றோம்.

அவர்களில் விசேடமாக வட மகாhணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வில் மீள் எழமுடியாமல் நலிவுற்றுள்ள இளைஞர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் போன்றோரே இவ்வாறு கடமையாற்றுகின்றனர். இவ்வாறான நிலையில் நாம் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் தொழில் அடிமைகளாக பயன்படுத்தப்படடு வருகின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .