2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச முன்னோடிப் பரீட்சை

Princiya Dixci   / 2016 ஜூலை 23 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச முன்னோடிப் புலமைப்பரிசில் பரீட்சையை, அக்கரைப்பற்று ஹிக்மா தொழில்நுட்ப கல்லூரி, நாளை ஞாயிற்றுக்கிழமை (24) நடத்தவுள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.ஐ.இர்ஷாத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறிகையில்,

அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் 2,000 மாணவர்களையும் தயார்படுத்தி அவர்களை ஹிக்மா தொழில்நுட்ப கல்லூரியினால் நடத்தப்படும் பரீட்சையிலும், அரசாங்கப் புலமைப்பரிசில் பரீட்சையிலும் வெற்றிபெறவேண்டும் என்பதற்காவே இந்த விசேட புலமைப் பரிசில் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

ஹிக்மா தொழில்நுட்ப கல்லூரியினால் நடத்தப்படும் இந்த இலவச முன்னோடிப் பரீட்சையை கடந்த 25 வருடங்களாக நடத்தி வருவதாகவும் இப்பரீட்சையில் தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

மேலும், இப்பரீட்சை 10 நிலயங்களில் இடம்பெறுவதாகவும் இதில் அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள 6 பாடசாலைகளிலும் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள 4 பாடசாலைகளிலும் இப்பரீட்சை நடைபெறவுள்ளது.

அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள தேசிய பாடசாலை, அல் முனவ்வறா ஜூனியர் பாடசாலை, ஆயிஷா வித்தியாலயம், அஸ் ஸிறாஜ் வித்தியாலயம், அஸ் ஸாஹிறா வித்தியாலயம், அல் பாயிஸா ஆகிய பாடசாலைகளிலும் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலை, பாலமுனை மின்ஹாஜ் வித்தியாலயம், ஒலுவில் அல் ஹம்றா வித்தியாலயம் ஆகிய 10 பாடசாலைகளிலும் இப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .