2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஹிலாரியின் உப-ஜனாதிபதி வேட்பாளராக கெய்ன்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 23 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டன், தனது உப-ஜனாதிபதி வேட்பாளராக, வெர்ஜினியாவைச் சேர்ந்த செனட்டரான டிம் கெய்னை தெரிவு செய்துள்ளார்.

முதன்முறையாக, நேற்று வெள்ளிக்கிழமை டுவீட் ஒன்றிலேயே மேற்படி அறிவிப்பினை ஹிலாரி வெளியிட்டிருந்த நிலையில், இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலில், வெர்ஜினியா, முக்கிய தேர்தல் களமொன்றாக விளங்கவுள்ள நிலையில், சரளமாக ஸ்பானிய மொழியில் உரையாடக் கூடிய கெய்ன், ஸ்பானிய அமெரிக்கர்களின் ஹிலாரிக்கான ஆதரவை பேண உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் ஆதரவாளரான கெய்ன், தனிப்பட்ட ரீதியில் கருக்கலைப்பை எதிர்க்கின்ற போதும், கருக்கலைப்புக்கான உரிமைகளுக்கு ஆதரவளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X