2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'தேடல்கள் இருக்கும் வரையில் உயிர்கள் இருப்பு இருக்கும்'

Gavitha   / 2016 ஜூலை 24 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

'தேடல்கள் இருக்கும் வரையும் உலகத்தில் உயிர்கள் தமது இருப்பை தீர்மானித்துக் கொள்ள முடியும்;' என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில், கெயார் நிறுவனம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினரின் ஏற்பாட்டிலும் சனிக்கிழமை (24) ஆரம்பமான வணிக கண்காட்சியும் தொழிற்;சந்தையினையும் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'தேடல்கள் இருக்கும் வரைக்கும் உலகத்தில் உயிர்கள் தமது இருப்பை தீர்மானித்துக் கொள்ள முடியும். அந்;த தேடல்களை சரியான வகையில் உருவாக்கி கொள்வதற்கும் அந்தத்  தேடலுக்கான காலத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கும் அவர்களுக்கான ஒரு பாதை வரலாற்றுப் பக்கம் வழங்;கப்பட வேண்டும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் கடந்த காலங்களில் யுத்த சூழ்நிலைகளுக்குள் தள்;ளப்பட்டு, தற்;போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக யாழ். மாவட்டத்தில் மட்டும் 82 ஆயிரம் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்;பின்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளும், முல்;லைத்தீவு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 800 பேரும், மன்னார் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 200 பேரும், வவுனியா மாவட்டத்தில் 24 ஆயிரத்து 300 பேரும் தொழில் வாய்ப்பில்லாமல் உள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாய்க்கால் வெட்டுவதற்கான கருவியை கண்டு பிடித்துள்ளார். இவ்வாறான கண்;டுபிடிப்புக்கள் எமது இளைஞர் யுவதிகளிடத்தில் உள்ள போதும், அவர்களுக்கான ஊக்குவிப்புக்கள் வழங்கப்படுவதில்லை. அத்துடன் அதன் உத்வேகத்துக்கான காரணங்கள் தேடிக்கொடுக்கப்படுவதில்லை. இவை வழங்கப்படும் போது உலகத்தில் இவர்களும் சாதிக்க முடியும்' என்று அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .