2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Niroshini   / 2016 ஜூலை 24 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகைத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை அதிகரிக்கச் செய்து தனியார்  வைத்தியசாலைக் கட்டணங்கள் மீது அறவிடப்படும் வட் வரியினை முற்றாக நீக்குமாறு ஏற்புடைய பிரிவுகளுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற இலங்கை போதைப்பொருள் ஒழிப்புக்கான மகாசபையின் 104ஆவது ஆண்டு பூர்த்தி விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மனித உயிர்களை அழிக்கும் புகைத்தலினாலும் போதைப்பொருட்களினாலும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்  மேற்கொள்வதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கும் பொலிஸ் மற்றும் மதுவரி உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக தரைப்படை, கடற்படை, விமானப்படைகளிலும் விசேட தகவல் சேவை மற்றும் புலனாய்வுத் துறைகளிலும் புறம்பான பிரிவுகளை தாபிப்பதற்கு தேசிய பாதுகாப்பு சபையில் தான் ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

புகையிலை மற்றும் மதுசாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் திறைசேரியைப் பலப்படுத்தல் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்களை ஆரோக்கியம் மிக்க மக்களாக கட்டியெழுப்பி சுதந்திரமானதொரு நாட்டைக் கட்டியெழுப்புதல் அரசாங்கதின் நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

இலங்கை போதைப்பொருள் ஒழிப்புக்கான மகாசபை மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் இதனோடு தொடர்பாக தொழிற்படும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு அமைப்புக்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளின்போது மேலெழுந்த விடயங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விசேட யோசனைத்திட்டம் இங்கு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .