2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணிகளையும் இறங்குதுறையையும் அபகரிக்கும் கடற்படை

Menaka Mookandi   / 2016 ஜூலை 25 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம் இறங்குதுறையில், கடற்படையினர் நிலைகொண்டிருப்பதன் காரணமாக, அப்பகுதி கடற்றொழிலாளர்கள், பிறவழியூடாகவே கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், அன்புபுரம் பகுதியில் உள்ள ஆயிரம்  ஏக்கருக்கும்  மேற்பட்ட காணிகளை, கடற்படையினர் சுவீகரித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  

இக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 70 குடும்பங்கள், கடற்றொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்பங்கள், கடற்றொழில் புரிவதற்கு, இந்த இறங்குதுறை முக்கியமானதாகும். ஆனால், கடற்படையினர் அதில் நிலைகொண்டிருப்பதன் காரணமாக, தொழிலுக்குச் செல்லும்போது நீண்டதூரம் சென்று கடலில் இறங்கவேண்டியுள்ளதாகவும் கடந்த இருபத்தைந்து  வருடங்களுக்கும்  மேலாக, இந்த இறங்குதுறையையே தாம் பயன்படுத்தி வந்ததாகவும் அக்கிராம கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை கடற்படையினர்  பிடித்திருப்பது  மட்டுமல்லாமல், தாங்கள் வாழ்ந்த காணிகளில் இருந்து  தம்மை  வெளியேற்றி, வீதியின் மறுபுறத்தில் வசிக்குமாறு பணித்துள்ளனர் என்றும் தெரிவித்த அவர்கள், அக்காணிகளைச் சுற்றி, முட்கம்பி வேலிகளை அமைத்துள்ளதாகவும், தமது   காணிகளிலிருந்தும் இறங்குதுறையிலிருந்தும், கடற்படையினரை இடமாற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .