கருவிலுள்ள குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்து சாதனை
25-07-2016 03:08 PM
Comments - 0       Views - 183

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் முதல் முறையாக கருவில் இருக்கும் 24 வார குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்து வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கருவுற்ற பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது வயிற்றில் இருந்த 24 வார குழந்தை, ஸ்பைனா பிபிடா (Spina bifida) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்பைனா பிபிடா என்பது முதுகு தண்டுவடத்தை சுற்றிய எலும்புகள் சரியாக வளர்ச்சி அடையாத நிலை ஆகும். இந்த நோய் அவுஸ்திரேலியாவில் மிக அரிதான ஒன்றாகும்.

கருவுற்ற பெண்ணுக்கு மயக்க மருந்து அளித்து, அப்பெண்ணின் கருப்பை உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கருப்பைக்குள் சில திரவங்களை உட்செலுத்தி உள்ளனர்.

இதனால் கருப்பையின் மேற்பகுதிக்கு வந்த குழந்தையில் உடலை திருப்பி, அதன் முதுகு தண்டுவட பகுதியில் சத்திரசிகிச்சை செய்துள்ளனர். பின்னர் கருப்பையை மீண்டும் அப்பெண்ணின் உடலில் வைத்து தைத்துள்ளனர்.

அமெரிக்க நிபுணர்கள் குழுவின் உதவியுடன் சுமார் 40 பேர் கொண்ட  அவுஸ்திரேலிய வைத்தியர்கள் குழு இதனை செய்து முடித்துள்ளது.

"கருவிலுள்ள குழந்தைக்கு சத்திரசிகிச்சை செய்து சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty