பூங்காவுக்குச் சென்ற பெண்ணை புலி கொண்டுச்சென்றது (VIDEO)
25-07-2016 10:18 AM
Comments - 0       Views - 299

சீனா தலைநகர் பீஜிங்கில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் புலியிடம் சிக்கிய தனது மகளை மீட்கச் சென்ற தாய், வேறொரு புலியினால் தாக்கப்பட்டு இறந்த பரிதாப சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

பூங்காவில் சைபீரியன் புலிகள் பராமரிக்கப்படும் பகுதியில் பார்வையாளர்கள் கார்கள் நிறுத்தவோ, இறங்கி நடக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

எனினும், சில தினங்களுக்கு முன்னர் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் காரொன்று வந்து நின்றது.

காரிலிருந்து இறங்கிய இளம்பெண் ஒருவர், கீழே இறங்கி வீதியில் நின்றபடி காருக்குள் இருந்தவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென புலி ஒன்று பாய்ந்து வந்து அவரை தாக்கி இழுத்துச் சென்றது. இந்தக் காட்சியைக் கண்டு பதறிய இளம்பெண்ணின் தாயாரும் மற்றொருவரும் அலறியடித்தபடி அப்பெண்ணை மீட்க புலியைத் துரத்திச் சென்றனர்.

அப்போது, மகளை மீட்க  சென்ற தாயை வேறொரு புலி கடுமையாகத் தாக்கியது, இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு இளம்பெண், தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"பூங்காவுக்குச் சென்ற பெண்ணை புலி கொண்டுச்சென்றது (VIDEO)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty