2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரவிராஜ் படுகொலை: நெறிப்படுத்த திகதி குறிப்பு

Kanagaraj   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கில், நீதிமன்றுக்கு வராதிருக்கும் சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிரான சாட்சியங்களை, வழக்குத் தொடுநர் நெறிப்படுத்துவதற்கான தினமாக, ஓகஸ்ட் 1ஆம் திகதியை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (26) அறிவித்தார்.

நீதவான் நீதிமன்றின் சுருக்கமுறையற்ற விசாரணை தொடங்கிய காலந்தொட்டு, நீதிமன்றுக்கு வராதிருக்கும் மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிராக, இந்த வழக்கை நடத்த வழக்குத் தொடுநரின் சாட்சியத்தை நெறிப்படுத்தப் போவதாக, அரச வழக்குரைஞரான ரோஹந்த அபேசூரிய, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அறுவர் மீது சட்டமா அதிபர் வழக்குத்தாக்கல் செய்தார்.

விசாரணைக்கு வந்திருந்த சந்தேகநபர்கள் மூவரும், முன்னாள் கடற்படையினராவர்,  இவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றில் சமுகமளிக்காதுள்ளோர், கருணா குழுவின் உறுப்பினர்களாவர் என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விஜய விக்ரம மனம்பேரிகே சஞ்சல பிரீதி விராஜ் அரச சாட்சியாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .