2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐக்கிய அரபு நாடுகளில் 100 ஊழியர்கள் நிர்க்கதி

Princiya Dixci   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு நாடுகளில் கடமையாற்றும் ஊழியர்களில் இலங்கைப் பிரஜைகள் உட்பட 100 பேர் காலாவதியான வேலை அனுமதிப்பத்திரத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கைப் பிரஜைகள் 12 பேர் உட்பட பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச்  சேர்ந்த ஊழியர்களே காலாவதியான வேலை அனுமதிப்பத்திரத்துடன் உள்ளனர்.

இவ்வாறு காலாவதியான வேலை அனுமதிப்பத்திரத்துடன் இருப்போருக்கு போதியளவு உணவு மற்றும் நீர் உள்ளிட்டவை  வழங்கப்படுவதில்லை என்பதுடன், இவர்களுக்கு கழிவறை வசதியும் சரியான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதில்லை. அத்துடன், இவர்களுக்கான கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், தங்களின் நாடுகளுக்குத் தங்களை  அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .