2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Niroshini   / 2016 ஜூலை 27 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக வங்கியின் 399 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள தொண்டைமானாறு தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகளை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை (27) சம்பிராதயபூர்வமாக தொடக்கி வைத்தார்.

தொண்டைமானாறு உவர் நீரேரியில் மழை நீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கெனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள் உருக்கினால் ஆனவை என்பதால் துருவேறிப் பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது 300 மில்லியன் ரூபாய் செலவில் துருப்பிடிக்காத கறையில்உருக்கினாலான மடைக் கதவுகளைக் கொண்டதாகத் தடுப்பணை புனரமைக்கப்படவுள்ளது.

தொண்டைமானாறு ஏரியில், தடுப்பணையின் மடைக் கதவுகளை மூடி மழை நீரைச் சேகரிக்கும் போது தாழ்வான வயல்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்கிறது. இதனைத் தடுக்கும் நோக்குடன் இரண்டு இடங்களில் வெள்ளத் தடுப்பணைகளும் கட்டப்படவுள்ளன. சீமெந்துக் கட்டுமானப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பணைகளுக்கென 99 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்புனரமைப்பு வேலைகள் யாவும் 2 வருடங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி வே.பிறேமகுமார், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன், பிரதிப் பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .