2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சிநேகபூர்வப் போட்டியில் வெளியேற்றப்பட்டார் ஃபப்ரிகாஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஓகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள 2016/17 இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்துக்கு முன்னர், ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ ஆட்டமொன்றில், லிவர்பூலால் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட றக்னர் கிளாவன் மீது விதிமீறல் சவாலை மேற்கொண்டமை காரணமாக, செல்சியின் மத்தியகள வீரர் சீஸ்க் ஃபப்ரிகாஸுக்கு நேரடியாகவே சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டார்.

காலினை உயர்த்தியபடியே, 29 வயதான ஃபப்ரிகாஸ், சவாலை மேற்கொண்ட நிலையில், எவ்வித தயக்கமுமின்றி மத்தியஸ்தர் சிவப்பு அட்டையை காண்பித்திருந்தார்.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் செல்சியின் பின்கள வீரர் கரி காகில் தலையால் முட்டிப் பெற்ற கோல் கைகொடுக்க, 1-0 என்ற கோல்கணக்கில், குறித்த போட்டியில் செல்சி வென்றிருந்தது.

இந்நிலையில், போட்டி முடிவடைந்த பின்னர், லிவர்பூல் அணியின் வீரர்கள் உடைமாற்றும் அறைக்குச் சென்ற ஃபப்ரிகாஸ், மன்னிப்புக் கோரியதாக லிவர்பூலின் முகாமையாளர் ஜூர்ரன் க்ளோப் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, செல்சியின் புதிய முகாமையாளர் அந்தோனியோ கொந்தேயும் மன்னிப்புக் கோரிய போதும், குறித்த சவாலானது குறிப்பிட்ட நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .