2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தெற்கில் 15 ஆயிரம் ஏக்கரை சீனா கோருகின்றது

Princiya Dixci   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென்பகுதியில் பொருளாதார மையமொன்றை அமைப்பதற்கு சீன அரசாங்கம் 15,000 ஏக்கர் நிலப்பரைப்பை கோரியுள்ளது. இதன்மூலம் ஒரு மில்லியன் தொழில்வாய்ப்புக்கள் உண்டாகவுள்ளதாக, நாட்டின் அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அனுமதி வழங்கப்படுமாயின், கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த அபிவிருத்தி திட்டங்கள் தோல்வியடைந்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே இந்தப் பொருளாதார மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுமாயின், மிகவும் வெறுமையான சர்வதேச விமான நிலையம், 1.4 அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம், மாநாடுகள் நடத்தப்படாத உலக வர்த்தக மாநாட்டு மையம் மற்றும் எப்போதாவது பயன்படுத்தப்படும் கிரிக்கெட் மைதானம் போன்றவை அனைத்தையும் உள்ளடக்கியே அமைக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முற்றுமுழுதான சீனாவின் நிதியில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 8 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் இதன்மூலம் சீனாவிடம் இலங்கை  பெற்றுக்கொண்ட கடனையும் திருப்பி செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .