மர்ம உறுப்பை படமெடுத்து பதம்பார்த்த பாம்பு (வீடியோ இணைப்பு)
29-07-2016 12:45 PM
Comments - 0       Views - 3502

நம்மை போல அல்ல, அதன் சாயலில் இன்னொருவரை கண்டுவிட்டால், நம் கண்ணையே நமக்கு நம்பமுடியாது  அப்படிதானே?

இது அந்த கதையல்ல வேற கதை, சரி பார்ப்போம்,

அலைபேசி இல்லாதவர்கள் கைகளே இல்லையெனலாம், அதிலும் ஐபோன் என்றால் சொல்லவா வேணும், போகுமிடமெல்லாம் படம் எடுப்பதும் வீடியோ பண்ணுவதும்தான் வேலையாக இருக்கும்.

அப்படி எடுக்கப்படுவதை, இணைத்தளங்களில் தரவேற்றம் செய்வது, மனிதர்களிடத்தில் தொற்றா நோயாகிவிட்டது.

யாராவது பாதிக்கப்பட்டால், அவரை காப்பாற்றுவதை விடவும் வீடியோ எடுப்பது அல்லது படம்பிடிப்பதே பெரும் வேலையாக, மனிதர்களில் சிலர் செய்துகொண்டிருக்கின்றனர்.

அதற்கு உதாரணம் காட்டும் வகையிலேயே ஒரு வீடியோ, இணைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளது. அது பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வீதியில் திரிந்துகொண்டிருந்த நாயை நோக்கி, நல்லப்பாம்பொன்று ஊர்ந்து வந்துள்ளது.
படம்மெடுப்பதற்குதான் அந்த பாம்பு வருகின்றதோ என்றெண்ணிய அந்த நாயும், பாம்பை உச்சி முகர்ந்துள்ளது.

உச்சிமுகர்ந்த உபசரிப்பை மனமுவர்ந்து ஏற்ற, நல்லப்பாம்பு, அந்த ஆண்நாயின் மர்ம உறுப்பை சீண்டிவிட்டது.

நாயோ, வேதனை தாங்கமுடியாமல் துடித்துடித்தது. எனினும், வீடியோ எடுத்தவர் அந்நாயை காப்பாற்றுவதற்கு எவ்விதமான முயற்சிகளை மேற்கொள்வில்லை என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நம்ம நாட்டுல்ல இல்ல, வெளிநாட்டில்தான் இடம்பெற்றிருக்கின்றது.

நல்லப்பாம்பு செய்தது நல்லதல்ல.

என்றாலும், இதேமாதிரியான சம்பவமொன்று இங்கு இடம்பெற்றிருந்தாலும் எம்மில் பலரும் வீடியோ எடுத்திருப்பர் இல்லாவிடின் படம்பிடித்திருப்பர். அவ்வளவு தூரத்துக்கு மனித சமுகம் சென்றுவிட்டது.

"மர்ம உறுப்பை படமெடுத்து பதம்பார்த்த பாம்பு (வீடியோ இணைப்பு)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty