2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிகாரிகளோடு முரண்படுவது தனிநபர் முரண்பாடாக பார்க்கக் கூடாது

Niroshini   / 2016 ஜூலை 30 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எம் எஸ் அப்துல் ஹலீம்

திருகோணமலை மாவட்ட பாடசாலைகளின்  ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பாக  மாகாண சபையில் அடிக்கடி பிரேரணை முன்வைத்து பேசி கல்வி அமைச்சர் மற்றும்  வலய கல்வி அதிகாரிகளோடு முரண்படுவதை தனிநபர் முரண்பாடாக பார்க்கக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

புல்மோட்டை மத்திய கல்லூரியின் தொழினுட்ப ஆய்வு கூடம் திறப்புவிழா நேற்று (29) இடம்பெற்றது. அங்கு அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உரையாற்றுகையில்,

“பிரதேச பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றும்படி கோரியதை அமைச்சர் ஒருபோதும் முரண்பாடாக கருதமாட்டார். அத்துடன், எதிர்வரும் ஒருசில மாதங்களுக்குள் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டிப்பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு  கணிதம், விஞ்ஞனம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்காக சுமார் 1134  பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளீர்க்கபட்டு நியமிக்கப்பட உள்ளார்கள். குறித்த நியமனத்தின் போது குச்சவெளி கோட்டம் அவ்வாறே மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் நியமிக்க படவுள்ளதாக கல்வி அமைச்சர் வாக்குறுதி தந்துள்ளார்.

 எமது பிரதேசத்தில் குறைந்த வளங்களை கொண்டு க.பொ.தர சாதாரண தரம், உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை போன்றவற்றில் நல்ல பெறுபேறுகளை மாவட்ட ரீதியில் பெற்றுள்ளார்கள் தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதனூடாக மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைக்கக்கூடிய மாணவர்கள் எமது மாணவர்கள். அதனால் எமது மாவட்டத்தையும் மாகாணத்தையும் கல்வியில் உயர்த்த எதுவாக இருக்கும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .