2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'ஆசிரியர் பற்றாக்குறை விவகாரத்தை பக்குவமாகக் கையாளவேண்டும்'

Thipaan   / 2016 ஜூலை 30 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகளை ஆர்ப்பாட்டங்களின்றி, பக்குவமாகக் கையாள வேண்டும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை புல்மோட்டை மத்தியக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடம் நேற்று வெள்ளிக்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டது. அதில், அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர், பிரதேச மற்றும் மாவட்ட கல்வி தொடர்பாக மாகாண சபையில் பிரேரணைகளை பல முறை முன்வைத்து பேசினார். என்னோடும் பல முறை முரண்பட்டமை குறித்து நான் பிழையாக கருதவில்லை. அது நியாயமான கோரிக்கை என்பதை நான்அறிவேன்.

அத்துடன், அதிபர், ஆசிரியர்கள் தியாக மனப்பாங்குடன், செயற்படவேண்டும். மாணவர்களை தூண்டிவிட்டு வீதிகளில் போராட்டங்களை ஏற்படுத்துவது முறையற்றது. அவற்றைப் பக்குவமாகக் கையாளவேண்டும்.

குறித்த ஆசிரியர்கள் பற்றாகுறைக்கு, இன்னும் ஓர் இரு மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்.

அத்தோடு, கிழக்கு மாகாணத்தின் கல்வி விடயங்களைப் பக்குவமாகக் கையாளவேண்டும். ஆசிரியர்களின் சேவைகளின் போது பாரபட்சம் காட்டப்படக்கூடாது. இவ்வாறான விடயங்களுக்கு அரசியல் வாதிகள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X