2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறந்த மின்னஞ்சல் கையொப்பமிடுவது எப்படி?

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 29 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டினேஷ் ஜெபமணி

சாதாரணமாக காரியாலயத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரு நாளைக்கு 40 மின்னஞ்சல் வரை அனுப்புகிறார். அது உங்களையும் உங்கள் வியாபாரத்தையும் சந்தைப்படுத்துவதற்கான 40 சந்தர்ப்பங்களாக இருக்கிறது.

பலர் தமது கையொப்பத்தை மறுயோசனையாக எண்ணி அலட்சியமாக பாவிப்பதால், உண்மையான ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள். அந்த கையொப்பங்கள் தான் உங்களை யார் என்று தெளிவாக அடையாளப்படுத்தப்போகும் அங்கம். மக்களை உங்களுடன் தொடர்பு கொள்ளச் செய்யவும் எங்கு சென்றால் பலவற்றை  (உங்களைப்பற்றி அல்லது உங்கள் வியாபாரத்தைப் பற்றி) தெரிந்து கொள்ளலாம் என தோன்றச் செய்யும் வழி.

உங்கள் பெயரையும் உங்களையும் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை மட்டும் தெரிவிக்காமல், உங்களுக்கான சந்தர்பங்களை உங்கள் கையொப்பம் மூலம் எவ்வாறு அறிந்து கொள்வது என்பது பற்றி நோக்குவோம்.

சிறந்த மின்னஞ்சல்  கையொப்பத்திற்கான 9 குறிப்புகள்

1. சாதாரணமான சீரான நிறங்களில் வைத்திருங்கள்

சீராக எதையும் வைத்திருக்கும்போது அது அடையாளமாக மாறுகிறது. உங்கள் கையொப்பமும் அவ்வாறே அடையாளமாகிறது. உங்கள் கையொப்பத்திற்கு வேறு நிறமிடுவதால் அது உங்கள் மின்னஞ்சலின் உள்ளடக்கத்திலிருந்து தனித்து தெரிகிறது. அப்படி நிறம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒன்று அல்லது இரண்டு நிறங்களுடன் நிறுத்திக்கொள்வது நன்று.

உங்கள் லோகோவிற்கு ஏற்ற நுட்பமான சிறப்பு கூறுகளை பயன்படுத்தவும். இங்கு Brittany Hodak அவரது மின்னஞ்சல் கையொப்பத்தில் பயன்படுத்துவதுபோல்

2. வடிவமைத்தல் வரிசையை பயன்படுத்தலாம்.

சிறந்த வடிவமைத்தல் என்பது உங்கள் தகவலை இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் இருத்தலாகும். உங்கள் கையொப்பமானது தகவலின் பட்டியலாக இருக்கப்போவதால், அதை வரிசைப்படுத்துவதலிருந்தே, வாசிப்பவர் எதை முதலில் பார்க்கவேண்டும் என்பதை தெரிவு செய்யப்படுகிறது.

உங்கள் பெயரை பெரிய உருவில் எழுதுவதால் அது கவனத்தை ஈர்க்கிறது. அதற்கு பின்னர் நீங்கள் கொடுக்கபோகும் தகவலின் முக்கியத்துவதிற்கு ஏற்ப அதை தடிப்பமாக அல்லது நிறவேறுபாட்டுடன் குடுக்கலாம்
கீழே உள்ள உதாரணம் போலே

3. Call-to-actionஐ உட்படுத்துங்கள் (அதை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளுங்கள்)

உங்கள் மின்னஞ்சலில் நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விடயமாக Call-to-actionஐ உள்ளடக்குதல். சிறந்த மின்னஞ்சல் கையொப்ப CTAsகள் சாதாரணமாகவும் மேம்படுத்தப்பட்டது, தூண்டுதலற்ற மற்றும் அது விற்பனை விளம்பரமாக இருப்பதைக் குறைக்கிறது. உங்கள் வியாபார இலக்குகளுக்கு ஏற்றப்போல CTAவை தெரிந்தெடுத்து அதை உங்கள் இலக்குகள் மாறும்போது அதையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
Chelsea Hunersen எனும் சமூக வலைத்தள முகாமையாளர் சிலமாதங்களுக்கு முன்னர் டுவிட்டர் கணக்கு தொடர்பாக CTAவை பாவித்த முறையை பாருங்களேன்


ஜீமெயிலில் சில சமயம் காணொளி இணைப்புகளை உங்கள் கையெழுத்துக்கு கீழ் இருப்பதும் அதைத் தனித்து காட்டுகிறது.

4. உங்கள் சமூக வலைத்தளத்திற்கான சமூக icons மூலம் இணையுங்கள்

உங்களுடைய சமூக இருப்பு உங்களுக்கு சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் முக்கிய அம்சமாகும். ஏனெனில் அது உங்கள் இடத்துக்குள் அவர்களை நுழைய விடுவதுடன், நீங்கள் எதன் மீது ஆர்வம் கொண்டுள்ளீர்கள் என அறியவும் உதவும்.

இணைப்புகளை, ஐகொனைப் பயன்படுத்துவதால் பார்பவர் அதை இலகுவிலும் விரைவாகவும் புரிந்துகொள்ளமுடிகிறது. பல சமூக வலைத்தளங்களில் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் 5 அல்லது 6 இணைப்புகளை மட்டும் இடங்கள்.

5. இணைப்புகளை தொடரக்கூடிய வகையில் வைத்திருத்தல்

நீங்கள் உங்கள் கையொப்பத்துடன் போடும் சமூக வலைத்தள இணைப்புகளை யாரும் உண்மையில் அதை அழுத்தி பார்க்கிறார்களா?

இதை அறிந்துகொள்ள இங்கு காணப்படும் http://blog.hubspot.com/marketing/what-are-utm-tracking-codes-ht படிமுறைகளை கையாளவும்.
 

6. இடைவெளியை பிரித்துக்காட்டுங்கள்

உங்கள் மின்னஞ்சல் கையொப்பத்தில்  நிறைய விடயங்கள் கொடுக்கவிரும்பாவிடிலும் எழுத்துக்களை உரியமுறையில் பொருந்த செய்ய சில வழிமுறைகளை கையாளலாம்.

இது உங்கள் பெயர் தொடர்புகொள்ளும் வழிகள் போன்ற  தகவல்களை பிரித்துக்காட்ட உதவும்.  கீழே உள்ள உதாரணத்தில் அவர் நிலைக்குத்து கோட்டின் மூலம் பிரித்துக்காட்டுகிறார்.

7. உங்கள் மின்னஞ்சல் மூலம் உங்கள் நாட்காட்டியை அடைய வழிவிடுங்கள்

நீங்கள் அன்றாடம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் மற்றும் சக ஊழியர்களை சந்திக்க அன்றாடம் மின்னஞ்சல் பாவிக்கிறீர்கள் என்றால், அதை விடுத்து உங்கள் கையொப்பத்துடன் உங்கள் இணைய நாட்காட்டியின் இணைப்பை வழங்குங்கள். அவர்கள் அதன் மூலம் உங்களை சந்திக்கும் நேரம் தொடர்பாக பதிவு செய்துகொள்வார்கள்.

உங்கள் சந்திப்புகளை ஒழுங்கு செய்ய உதவும் https://calendly.com/ மற்றும் https://youcanbook.me/pricing/ போன்ற சில சாதனங்கள் உண்டு, அவற்றையும் பயன்படுத்தலாம்.

8. உங்கள் சர்வதேச குறியீட்டு இலக்கத்தை வழங்குங்கள்
உலகளாவிய மக்களுடன் வேலை செய்கிறீர்கள் என்றால் உங்கள் தொலைபேசி எண்ணுடன் சர்வதேச குறியீட்டு எண்ணை வழங்குங்கள். இதனால் அவர்கள் உங்களை தொடர்புகொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை தவித்துக்கொள்ள உதவும்.

9. உங்கள் கையொப்பத்தை கைபேசியிலும் பார்க்க கூடிய வகையில் வடிவமையுங்கள்

சுமார் 56% மக்கள் தமது அலைபேசியில் அவர்களின் மின்னஞ்சல் கணக்குகளை பார்வையிடுகின்றனர். அதனால் அவர்களையும் கவனத்தில் கொண்டு உங்கள் கையொப்பத்தை வடிவமையுங்கள்.

அதை இலகுவாக வாசிக்ககூடியதாகவும், அதை அழுத்திப்பார்க்ககூடியதாகவும் வைத்திருங்கள். இங்குதான் கையொப்பத்தின் அளவு முக்கியமாகிறது. உங்கள் ஒப்பத்தில் காணப்படும் எழுத்துகள் கைபேசியில் வாசிக்க கூடியதாகவும் அங்கு காணப்படும் இணைப்புகள் போதுமான அளவு இருத்தல் அவசியம். ஏனெனில் பேஸ்புக்கு செல்லவென அழுத்தும் போது டுவிட்டருக்கு சென்றால்… அவ்வாறான தவறுகளை குறைக்க கைபேசியையும் கருத்தில் கொண்டு உங்கள் கையொப்பத்தை வடிவமையுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .