2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கட்டுக்கரை மீன்சந்தைக்கு அமைச்சர் விஜயம்

George   / 2016 ஜூலை 30 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

மன்னார் கட்டுக்கரை நன்னீர் மீனவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு வடக்கு மீன்பிடி அமைச்சால் அமைத்துக்கொடுக்கப்பட்ட நன்னீர் மீன் சந்தைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்கள் மற்றும் நன்னீர் இறால் போன்றவற்றை பார்வையிட்டதோடு அங்குள்ள மீனவர்களுடனும் கலந்துரையாடினர்.

அக் கலந்துரையாடலில் குறித்த நன்னீர் இறால் தற்போது மிகுந்த தரமான வருமானத்தை தமக்கு தருவதாகவும், இவ்வகை இறால்கள் சாதாரணமாக இரண்டு இறால்கள் ஒரு கிலோகிராம் எடை வருவதாகவும் ஆகவே இவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் தம்மிடம் கிலோகிராம் ஒன்று 800 தொடக்கம் 1,000 ரூபாய் வரை கொள்வனவு செய்கின்றனர் என்றும் அதனால் தமது வாழ்வு இப்போது மிகுந்த சந்தோஷமாக இருப்பதாகவும், மிகுந்த மகிழ்வோடு அமைச்சருக்கு தெரிவித்தனர்.

அந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் அவர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இந்த முயற்சி வீண்போகாமல் மிகுந்த பலன் தந்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, இவ்வகை நன்னீர் இறால்களை கடந்த 7 தொடக்கம் 9 மாதங்களுக்கு முன்னர் வடக்கில் உள்ள அனைத்து பிரதான மீன்பிடி குளங்களுக்கும் சுமார் 06 இலட்சம் இறால் குஞ்சுகளை தம்முடைய அமைச்சு (NAQDA) நிறுவனத்தினருடைய உதவியோடு வைப்பிலிட்டதாகவும் அவை இன்று சுமார் ஒவ்வொன்றும் 600 தொடக்கம் 800 கிராம் நிறையுடையவையாக வளர்ந்து, நன்னீரின் மீன்பிடியில் ஒரு புதிய திருப்பத்தை வடக்கில் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்ததோடு, அந்த வேளையிலே இவ்வாறான தனது செயல்திட்டங்களை எப்பொழுதும் உயிரூட்டம் கொடுக்கும் தனது அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .