தும்ம ஆரம்பித்தால் நிறுத்த முடியாதாம்
01-08-2016 10:15 AM
Comments - 1       Views - 340

தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான ஒரு எதிர்நிலை செயற்பாடுதான் தும்மல்.

ஆனால், தும்மலே ஒரு நோயாகவும் மாறக்கூடும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஈரா சக்ஸேனா என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுமி, ஒரு முறை தும்ம ஆரம்பித்தால் அவரால் நிறுத்தவே முடியாதாம். ஒரு நிமிடத்தில் 10 முறை ஆக்ரோஷமாக தும்முகின்றாராம். தற்போது ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முறை தும்முகின்றாராம்.

இவரால் பாடசாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ செல்ல முடியாத நிலையில், எத்தனையோ மருத்துவ சிகிச்சைகளை பெற்றும் இவருக்கு என்ன நோய் என்று எந்த வைத்தியராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று குறித்த சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவர் தூங்கும் போது மாத்திரம் இவருக்கு தும்மல் வருவதில்லையாம். அதனால் அவர் தூக்கத்திலேயே தனது நாட்களை கழித்து வருகின்றாராம். ஒரு சில நேரங்களில் இவர் 25 நிமிடங்களுக்கு விடாமல் தும்மிக்கொண்டு இருப்பாராம்.
பல்வேறான முயற்சிகள் மேற்கொண்டும் இவரது இந்தத் தும்மல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடியாமை குறித்து ஏற்கெனவே வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது, ஆழ் நிலை தூக்கத்தின் மூலம் பதற்றம் மற்றும் வலி போன்ற பிரச்சினைகளை குணமாக்கும் அமெரிக்கா, லொஸ் ஏஞ்சல்ஸ்ஸில் உள்ள லிசா மச்சென்பர்க் என்ற ஹிப்னோதெரபிஸ்ட்டின் உதவியை நாடியுள்ளாராம், இந்த தும்மலினால் கஷ்டப்படும் சிறுமி.

 

"தும்ம ஆரம்பித்தால் நிறுத்த முடியாதாம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
mogan lal 18-08-2016 12:26 AM
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty