இரகசிய சந்திப்பு
01-08-2016 11:53 AM
Comments - 0       Views - 713

இந்த நாட்டோட தலைவரு, யாருக்குமே சொல்லாமல், கொழும்பு 7இல் இருக்கிற பிரபல விகாரையொன்றுக்குப் போய், அங்கிருக்கிற விகாராதிபதியை சந்திச்சாராம்.

சில தசாப்தங்களாக அரசியல் விவகாரங்களில தலையிட்டு வர்ற இந்த விகாராதிபதி, இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கும் தொடர்ந்து தேசிக்காய் வெட்டிக்கிட்டு தான் வந்தாரு.

எப்போதுமே, நாடு, இனம், மதம் பற்றியே பேசுற இந்த விகாராதிபதி கிட்ட, நாட்டில் நடந்த விசயங்கள், நடந்துகிட்டிருக்கிற சம்பவங்கள் பற்றியெல்லாம், நாட்டுத் தலைவர் விவரமாகப் பேசினாராம்.

அப்போ, நாட்டின் முக்கிய விசயங்களைப் பற்றி, முக்கியமாக இராணுவம், அரசியலமைப்பு என்பவற்றைப் பற்றி, அந்த விகாராதிபதி பல கேள்விகளை எழுப்பினாராம்.

சுமார் ஒன்றரை மணிநேரம் நீடிச்ச அந்த பேச்சுவார்த்தையோட முடிவின்போது, நாட்டுத் தலைவருக்கு அவர் ஓர் ஆலோசனையை வழங்கினாராம்.

'விவசாயத்தைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிற நீங்க, இந்த நாட்டுக்கு கெட்டது நடக்க இடமளிக்காதீங்க. அப்படி இடமளிச்சா, நாங்களும் உங்களை எதிர்க்கவேண்டி வரும்' என்று அந்த விகாராதிபதி சொன்னதும், 'அப்படியொன்றும் நடக்க நான் இடமளிக்க மாட்டேன் தேரரே' என்று நாட்டுத் தலைவரும் பதிலளிச்சிவிட்டு வெளியேறினாராம்.

"இரகசிய சந்திப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty