சாதனையாளர்கள்...
01-08-2016 11:45 AM
Comments - 0       Views - 184

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 17ஆவது ஆண்டாக வழங்கும் 2015ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அதியுயர் ஊடக விருது வழங்கும் நிகழ்வு,  மவுண்ட்லேவினியா ஹொட்டலில் நாளை செவ்வாய்க்கிழமை (02) மாலை 7.00 மணிக்கு நடைபெறும்.

இந்த விருதுகளுக்காக இம்முறை 11 பத்திரிகைளில் இருந்து மொத்தமாக 229 விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பக்கச்சார்பற்ற 11 பேர்  கொண்ட நடுவர் குழு மூலம், இவ்விருதுகளுக்கான ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வருடாவருடம் வழங்கப்படும் டென்சில் பீரிஸ் இளம் செய்தியாளருக்கான விருதை பெறுவபவர்கள் கேரளாவில் உள்ள மெஸ்கொம் ஊடகவியலாளர் பயிற்சி நிலையமும் சர்வதேச உறவுகள் மற்றும் கேந்திர ஆய்வுகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நலையமும் இணநை;து நடத்தும் 6 மாதகால இலவச பயிற்சியில் பங்கு பெறும் வாய்பை பெறுவர். பயிற்சி முடிந்து நாடு திரும்பியவுடன் அவருக்கு 1,000 டொலர்கள் (ரூபாய் 144,917) சன்மானமாக வழங்கப்படும்.

 ஊடகவியலாளர்களுக்கான அதியுயர் ஊடக விருது வழங்கும் நிகழ்வில், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வானது குறிப்பிடத்தக்க இன்னொரு விடயமாகும்.  40 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகை துறையில் சேவை புரியும் மூத்த ஊடவியலாளர்களுக்கே இவ்விருது வழங்கப்படும். அந்த விருதை இவ்வருடம் பெற்றுக்கொள்ளவிருப்பவர்கள்...

நெவில் டி சில்வா

லேக்ஹவுஸ் நிறுவனத்தினூடாக தனது ஊடகப் பயணத்தை இவர் ஆரம்பித்தார். அதன்பின் ஹொங் கொங்கில் உள்ள தி ஸ்டான்டட் மற்றும் லண்டனில் உள்ள ஜெமினி செய்திச் சேவையிலும் பணியாற்றியுள்ளார். மேலும், தி நிவ்யோக் டைம்ஸ், கிறிஸ்டியன் சைன்ஸ் மிரர், தி கார்டியன், லி மொன்டே, ஏசியன் வோல் ஸ்ரீட் ஜெர்னல், ஏ.பி.எம்.ஏ போன்ற பல வெளிநாட்டு ஊடகங்களில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். இவர், தற்போது சண்டே டைம்ஸ் ஆங்கிய பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகின்றார்.

 

 

 

 

 

 

 

வீரகத்தி தனபாலசிங்கம்

1977ஆம் ஆண்டு ஒப்பு நோக்குனராக வீரகேசரியில் இணைந்து கொண்ட இவர், 20 வருடங்களாக ஊடகவியலாளராகவும் வெளிநாட்டு செய்தியாளராகவும் நாடாளுமன்ற செய்தியாளராகவும் அங்கு பணியாற்றினார். பின்னர், 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தினக்குரல் பத்திரிகையின், முதல் செய்தியாசிரியராக கடமையாற்றி இவர், பின்னர் தினக்குரலில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

 

 

 

 

 

 

 

 

பிரேமசிறி அபேசிங்ஹ

இவர், சியத்த சிங்கள பத்திரிகையில் சிங்கள புத்தாய பகுதியில் தன பணியை ஆரம்பித்தார். பின்னர் 1977ஆம் ஆண்டு தினமின பத்திரிகையின் துணை பதிப்பாசிரியராக கடமையாற்றியுதுடன், புது சாசன எனும் பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் கடமையாற்றினார்.

 

 

 

 

 

 

 

 

பியசேன இஹலவித்தான

இவர், தவச சிங்கள பத்திரிகையில் நீண்டகாலமாக ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார் . பின்னர் தினமின சிங்களப் பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் இருதின பத்திரிகையின் துணை தலைமை பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.

 

 

 

 

 

 

 

சரத் மலலசேகர

இவர், லேக்ஹவுஸின் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும் சண்டே ஒப்சேவர் மற்றும் டெய்லி நியூஸ் பத்திரிகைகளுக்கு நீதிமன்ற செய்திகள் பிரிவின் விசேட செய்தியாளராகவும் உள்ளார்.

"சாதனையாளர்கள்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty