2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாணத்தில் 12 பாடசாலைகள் அபிவிருத்தி

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்; ஆலோசனைக்கமைய மலையகத்தில் 23 கணித விஞ்ஞான பாடசாலைகளும் ஒரு விளையாட்டு பாடசாலையும்  ஒரு நுண்கலை பாடசாலையும் சகல வசதிகளும் கொண்ட பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் செயற்றிட்டத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் நேரடி கண்காணிப்பில் மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் 12 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதில் தெரிவு செய்யப்பட்டுள்ள 12 பாடசாலைகளின் அதிபர்களுக்கும் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்  எஸ்.சதிஸ், மேலதிக கல்விப் பணிப்பாளர் ஜே.அமுதவள்ளி, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கண்டியில் நடைபெற்றது.

கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹேதுனாவ,  மத்திய கல்லூரி விளையாட்டு பாடசாலையாகவும் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட டிக்கோயா தமிழ் மகா  வித்தியாலயம் நுண்கலை பாடசாலையாகவும் ஏனைய 10  பாடசாலைகள்  கணித விஞ்ஞான பாடசாலைகளாகவும் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

மொத்தமாக 25 பாடசாலைகளில் மத்திய மாகாணத்தில் 12 பாடசாலைகளும் ஏனைய 13 பாடசாலைகள் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

மேலும், பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாகவும் அந்நிதிகள் பிரயோகிக்கப்படும் விடயங்கள் தொடர்பாகவும் தேவையான வளங்கள் தொடர்பாகவும் செயல்படுத்த இருக்கும் வேலைத்திட்டம் தொடர்பாகவும் ஆசிரியர் நியமனம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X