2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இறுதியில் புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக், புத்தளத்தில் தொடராக நடாத்தி வரும், புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான எஸ்.என். எல். அப்துல்லாஹ் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு புத்தளம் நகரின் 30 வருட கால பழைமை வாய்ந்த புத்தளம்  நியூ ஸ்டார்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி, புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது.

நியூ ஸ்டார்ஸ் அணியுடன், புத்தளம் நகரின் 70 வருட கால வரலாற்றினைகக் கொண்ட த்ரீ ஸ்டார்ஸ் அணி விளையாடியது. முதலாவது பாதியில் த்ரீ ஸ்டார்ஸ் அணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி உதையினை அவ்வணியின் சிரேஷ்ட வீரர் ஏ.எம். சபீக் தவற விட்டமையே அவ்வணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அவர் செலுத்திய அந்த பெனால்டி உதையினை நியூ ஸ்டார்ஸ் அணியின் கோல் காப்பாளர் எம். முனீர் இலாவகமாக தடுத்தி நிறுத்தினார்.

இதே வேகத்தில் எதிர்த் திசைக்கு சென்ற பந்தினை நியூ ஸ்டார்ஸ் அணியின் புதிய இளம் வீரரும் அண்மையில் கொரிய நாட்டில் நடைபெற்ற ஆசியக் கிண்ண 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட வீரர் எம்.எச்.எம். பைக்கர் கோலாக்கினார். இந்த வெற்றிக் கோலே அவ்வணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே கோல்களை புகுத்த கடுமையாக போராடிய போதும் கோல் போட முடியாமல் போனதால் நியூ ஸ்ட்ரார்ஸ் அணியானது இந்தப் போட்டியில் ஒரு கோலினால் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கான தகுதியை பெற்றது.

போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.எஸ்.எம். இனாஸ், ஏ.எம்.பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர்.

புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணியினை கடந்த 35 வருடங்களாக முஹம்மது அலியும் நியூ ஸ்டார்ஸ் அணியினை கடந்த 30 வருடங்களாக முஹம்மது செலேயும் வழி நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .