2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இது சிலையல்ல உண்மை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்த வடுக்கள் ஆறாதவை, அதிலும் தத்ரூபங்கள் எமது மனதை பிளக்கசெய்து, கத்திகுதறி அழவைத்துவிடும். அவ்வாறானதொரு தத்ரூபமான புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி, சகலரின் மனங்களையும் உறையச்செய்துவிட்டது.

சிரியா என்றால், தெரியாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அங்கு இடம்பெறும் யுத்தமும், அதன் வடுக்களும் ஊடகங்களுக்கு தீனிப்போட்டுக்கொண்டிருக்கின்றன.

அங்கு, இடம்பெறும் கொடூரத்தையே, 5 வயது சிறுவன் ஒருவனின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அலெப்போ நகரத்தில் நடந்த விமானத் தாக்குதலில் தரைமட்டமான கட்டமொன்றின் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட குறித்த சிறுவனை, அம்பூலன்ஸில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முற்றட்ட போதே இந்த வீடியோவும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

தூசி படந்த உடலுடன், முகத்தில் பட்டிருக்கு இரத்தக் கரையைத் துடைத்து மிகுந்த அச்சமும் சோகமும் கலந்து குறித்த சிறுவன் காணப்படுகின்றான். ஆனால், அவன் கண்களிலிருந்து ஒருதுளியேனும் கண்ணீர் சிந்தவில்லை.

பரிசோதனைக்கு உட்டுத்திய வைத்தியர்கள், இச்சிறுவனுக்குத் தலையில் அடிபட்டுள்ளதாகவும் எனினும், மூளையில் பாதிப்பு எதுவும் இல்லையெனவும் தெரிவித்துள்ளதாக செய்திவெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், சிகிச்சைகளுக்கு பின்னர் அந்தச் சிறுவன், வீட்டுக்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .