2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அன்பினை ஸ்பரிசிக்காதவர்கள் யார் உளர்?

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூரணத்துவத்துடன் கூடிய இன்பமயமான நிகழ்ச்சிகளை எமது மனம் உள்ளபடியே முழுமையாக உணர்ந்தால் மெய் சிலிர்த்துப் போகின்றது.

நல்ல கலை நிகழ்ச்சிகளை அதாவது இசை, பாடல், ஆடல், நல்ல பிரசங்கங்கள், அன்பானவர்களின் கனிவான பேச்சுக்கள் ஆகியவற்றை நுகரும்போது எமது தேகம் புல்லரித்தலே மெய்சிலிர்த்தலாகும்.

நாங்கள் எதிர்பாராத வண்ணம், நீண்ட நாட்களாகக் கதைத்தவர்களைக் கண்டுவிட்டால், பெரியவர்கள் எங்களைத் தொட்டு ஆசீர்வதித்தால், நாம் எட்டிப் பிடிக்கும் களிப்பினைச் சொல்லில் வடிக்க முடியாது.

இந்த அதிர்வுகள், சிலிர்ப்புகள் எங்கள் ஆன்;மாவுடன் இயைபுபட்டவை.

அன்பினை ஸ்பரிசிக்காதவர்கள் யார் உளர்? யார்எவர் எத்தரத்தில் இருப்பினும் நாங்கள் இந்தப் பூமியில் மானிடர்கள்தான். இதனை நிஜமாகவே உணர்ந்தால் எவரைப் பார்த்தாலும் பேதமின்றி நேசிக்கும் பக்குவம் வந்தே தீரும்.

அன்பு நிறுத்துப் பார்க்க இயலாத வியாபக அருவம்.

வாழ்வியல் தரிசனம் 24/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .