2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புதிய சம்பள முறைக்குஇ.தொ.கா எதிர்ப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

தோட்டக் கம்பனிகள் அறிவித்துள்ள 'உற்பத்தி அடிப்படையிலான சம்பளம்' என்ற புதிய சம்பள முறைமை, தொழிலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், இந்த முறையை தாம் நிராகரித்துள்ள அதேவளை, தொடர்ந்து பழைய முறையிலான சம்பள முறையை அமுல்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை  அலுவலகத்தில் நேற்று(24) அலுவலகத்தில் நேற்று (24)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

தோட்டக் கம்பனிகள் அறிவித்துள்ள புதிய முறைப்படி, தோட்டத் தொழிலாளி நாளொன்றுக்கு 14 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறிக்கும்போது, தற்போது வழங்கப்படும் சம்பளத்தை விடக் குறைந்த தொகையையே பெறவேண்டி வரும்.

மேலும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை கழிக்கும்போது, இத்தொகை மேலும் குறைவடையும்.

ஒட்டுமொத்தத்தில் 20கிலோவுக்கு குறைவாக தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளிக்கு சம்பளத் தொகை குறைந்துக் கொண்டுதான் போகும்.

இந்த முறைமைக்கு சம்மதிக்குமாறு தோட்டக் கம்பனிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதற்கு நாம் ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்றார்.

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அமைச்சர்கள் சிலர், எமது புதிய முறைமைக்கு சம்மதம் தெரிவித்ததிலேயே 2,500 ரூபாய் கொடுப்பனவை வழங்க நாம் சம்மதம் தெரிவித்தாகவும் மேலும் 100 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தோட்டக்கம்பனிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளன.

இந்த சம்பள உயர்வில் ஊழியர் சேமலாப நிதி உள்ளடக்கப்படவில்லை. இது தொடர்பில் விளக்கம் அளிப்பதற்கு யாரும் இல்லை.

மேலும், இவர்கள் கூறும் இடைக்காலக் கொடுப்பனவும் பெரும்பாலான தோட்டக் கம்பனிகளுக்குக் கிடைக்கவில்லை.

இந்தக் கொடுப்பனவு, தேர்தலை இலக்காகக் கொண்டே பிரதேச ரீதியாக தமிழ் அமைச்சர்களால் பகிரப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் கலந்துரையாடி தீர்க்கமான முடிவொன்றை பெற்றுக்கொடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

சம்பள முறையை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. அதிகளவான தொகை வழங்கப்படும் வகையில் பேசப்பட்டால், அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தமுறை சம்பளத்தை மேலும் குறைக்கும் வகையிலேயே உள்ளது. மேலும், கூட்டுஒப்பந்த முறை தொடர்பிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X