2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டெலிகொம் வழங்கும் இரு வழித்தொடர்பு சேவை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா டெலிகொம் பிஎல்சி (SLT) மாத்தறையில் முழுமையான SMW5 கேபிள் தரையேற்ற நிலைத்தைப் பெறும் வாய்ப்பைப் பெற்று, இலங்கையூடாக செல்லும் சர்வதேச கடலடி கேபிள் முறைமைகள் மூலம் அதி நவீன சர்வதேச சேவைகளை வழங்கி, பிராந்தியத்தின் முதன்மை இயக்குநராவதுக்கான முயற்சிகளை செய்துவருகிறது.

டெலிகொமின் இந்த சர்வதேச இருவழி தொடர்புச்சேவை வலையமைப்பானது, கொழும்பு, கல்கிஸை மற்றும் மாத்தறையிலுள்ள பிரதான கேபிள் நிலையங்களை உள்ளடக்கி, வெலிக்கடவிலுள்ள ஸ்ரீலரெ இருப்பிடத்திலுள்ள சர்வதேச இருவழித்தொடர்புச்சேவை மையத்தை இணைக்கிறது.

இந்த நிலையங்கள் யாவும், OTN NW இனால் இணைக்கப்பட்டு, இலங்கையூடாக செல்லும் எந்த கேபிள் முறைமையையும் சர்வதேச இணைப்புகைக்காக அர்ப்பணித்துள்ளது. இச்செயற்றிட்டத்தின் மூலமாக SEA-ME-WE 5 SEA-ME-WE 4, SEA-ME-WE 3, வு போன்ற கடலடி ஒளி இழை கேபிள் முறைமைகள் அதிக நம்பிக்கைத்தன்மையுள்ள இருவழித்தொடர்புச்சேவையை வழங்கும்.

இந்த சர்வதேச இருவழித்தொடர்புச்சேவை மூலம் இக்கம்பனியானது மேலும் வணிக வாய்ப்புக்களை தேடமுடியும். சகல பிற கடலடி கேபிள் முறைமைகளும் உள் நாட்டு இயக்குநர்களும் கொழும்பை மையப்படுத்தி இருப்பதால், மாத்தறை கேபிள் நிலையத்தின் இருவழித்தொடர்பு இணையப்போக்குவரத்தினை, கொழும்பு ஊடாக வழிப்படுத்துவதுக்கான வாய்ப்புக்கள் இனங்காணப்படும்.

சர்வதேச அலைவரிசைக்கு நாட்டில் அதிகரித்துவரும் கேள்வியை கருத்தில்கொண்டும் புதிய வாய்ப்புக்களை ஆராய்வதற்கும் விரிவாக்கத்திறனுள்ள சர்வதேச இருவழித்தொடர்புச்சேவை வலையமைப்பு முக்கியமானதாகும்.

உலகளாவிய இருவழித்தொடர்புச்சேவை சர்வதேச மற்றும் உள் நாட்டு போக்குவரத்தை அனுப்புவதால் அதியுயர் சேவை மட்ட உடன்படிக்கைகளின் தரங்கள் பேணப்படவேண்டும். எனவே நாம் உலகளாவிய தொலைத்தொடர்பு இயக்குனர்களுக்கு விரிவாக்கத்திறனுள்ள வலையமைப்பை வழங்கமுடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .