2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொலம்பியாவும் எஃப்.ஏ.ஆர்.சியும் இறுதி ஒப்பந்தம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் நீண்ட காலமாகத் தொடரும் மோதல்களில் ஒன்றான 50 வருட கொரில்லா யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கொலம்பிய அரசாங்கமும் இடதுசாரி எஃப்.ஏ.ஆர்.சி போராளிகளும் இறுதிச் சமாதான ஒப்பந்தத்தில் புதன்கிழமை (24) கைச்சாத்திட்டுள்ளன. குறித்த மோதல் காரணமாக, வளக் கொழிப்பை உடைய கொலம்பியா தகரும் நிலைக்குச் சென்றிருந்தது.

கொலம்பிய அரசாங்கத்துக்கும் எஃப்.ஏ.ஆர்.சி போராளிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகித்த கியூபா மற்றும் நோர்வேப் பிரதிநிதிகளால் வாசிக்கப்பட்ட இணைந்த அறிக்கையில், மோதலை முடிவுக்கு கொண்டுவரவும், உறுதியான சமாதானத்தைக் கட்டமைக்கவும் இணங்கியுள்ளதாக கொலம்பிய அரசாங்கமும் எஃப்.ஏ.ஆர்.சி போராளிகளும் தெரிவித்துள்ளன.

கொலம்பிய அரசாங்கத்தினதும் எஃப்.ஏ.ஆர்.சி போராளிகளினதும் தலைமை மத்தியஸ்தர்களினால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் கியூபப் பிரதிநிதி றொடோல்ஃபோ பெனிட்ஸ் வாசித்த அறிக்கையில், மோதலை முடிவுக்கு கொண்டுவரவும் உறுதியான நிலையை கட்டமைக்கவும் கொலம்பியாவில் அமைதியைத் தொடரவும் தாங்கள் இறுதி இணக்கத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரலாற்று ரீதியிலான இவ்வொப்பந்தத்தின் மூலம் கொலம்பியாவின் புரட்சிகர இராணுவப் படைகள் (எஃப்.ஏ.ஆர்.சி) கலைக்கப்படுவது கண்காணிக்கப்படவுள்ளது. கொக்கேய்ன் வியாபாரத்தால் நிதியளிக்கப்படும் மேற்படி இராணுவத்தின் அரசாங்கத்துடனான மோதலில் குறைந்தது 220,000 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருந்ததுடன், மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்திருந்தனர்.

எவ்வாறெனினும், கொலம்பிய முன்னாள் ஜனாதிபதிகள் இருவரால் எதிர்க்கப்படும் இவ்வொப்பந்தமானது, வாக்களிக்கப்பட்ட பின்னரே சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X