2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போக்கிமொனால் திணறும் பொலிஸார்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானிலுள்ள ஹொ ஸ்பிறிங்ஸ் பூங்காவிலேயே, போக்கிமொன் கோ விளையாட்டின் அரிதான உருவங்களை கைப்பற்றலாம் என்ற நிலையில், குறித்த பூங்காவானது போக்கிமொன் கோ விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ள நிலையில், குறித்த பூங்காவில் சனத்திரளை கட்டுப்படுத்த பொலிஸார் திணறுகின்றனர்.

தாய்வானின் தலைநகர் தாய்பேய்க்கு சற்று வெளியேயுள்ள பெய்டௌவிலுள்ள குறித்த பூங்காவானது வழமையாக அமைதியாகவிருக்கின்ற நிலையில், பிரபலமாகியுள்ள திறன்பேசிச் செயலி விளையாட்டான போக்கிமொன் கோ விளையாட்டுப் பிரியர்களால் சன நெருக்கடி மிக்கதாக ஆகியிருந்தது.

தற்போதைய நிலையில், பெய்டௌ பூங்காவைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெருக்கடிகளை பொலிஸார் வேறு இடங்களுக்குத் திருப்புவதுடன், சனத்திரளைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக மனித வலுவைப் பயன்படுத்துவதாக இவ்வாரம் தெரிவித்துள்ளனர்.

பெய்டௌவிலுள்ள போக்குவரத்து இடைமுகமொன்றில் ஆயிரக்கணக்கானோர் போக்கிமொனை துரத்திச் செல்லும் காணொளி இவ்வாரம் பிரபலமாகியிருந்தது. இந்நிலையில், போக்கிமொனைக் கண்டுபிடிக்க அதை விளையாடுபவர்கள் பயன்படுத்தும் Go Radar செயலியைத் தரவிறக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், எங்கு சனத்திரள் கூடும் என்பதை எதிர்வு கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்கூட்டர்களை விளையாடும்போதும் போக்கிமொனை விளையாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் பெய்டௌ பூங்காவைச் சுற்றி 474 போக்குவரத்து  தண்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‌

இந்நிலையில், போக்கிமொன் தாய்வானில் அறிமுகப்படுத்தப்பட்டு சில நாட்களிலேயே, போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,200 சாரதிகள் பிடிபட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கிமொன் கோ விளையாட்டில், அதனை விளையாடுவோர், அதிலுள்ள மெய்நிகர் கார்ட்டூன் உருவங்களை நிஜ உலகிலுள்ள இடங்களில் தேடுவதன் மூலம் குறுகிய நாட்களிலேயே இவ்விளையாட்டு பிரபலமடைந்திருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .